கவிஞர் மு. முருகேசன்
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் நூல். ஒவ்வொரு குறளையும் கதை வடிவில் காணலாம். விவாதிக்கலாம். "ஒரு வழியாக கொட்டித் தீர்த்த மழை நின்னுடுச்சு.. தப்பித்தோம்.." என சதாசிவம் இராமசாமியிடம் சொல்ல, "மாரி வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின், தணிப்பாரும் இல்" என்கிறது நாலடியார் (104). இதன் பொருள், "மழை பெய்யாவிட்டால் பெய்ய வைப்பவர் யாரும் இல்லை. மிகுதியாக மழை பொழியும்போது அதனைத் தடுப்பாரும் இல்லை" என்பதாகும். அப்படியென்றால் வள்ளுவர் ஏன் வான்சிறப்பு எனப் பாடவேண்டும்?