ந. ஜானகிராமன்
திட்டத்தலைவர்,
கொள்கை மற்றும் திட்டமிடல் மையம்
தானம் அறக்கட்டளை
இழப்பு என்பது இயல்பானது. ஆனால் அந்த இழப்பு அனைவருக்கும், ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. ஆகவே, அனைவரும் சேர்ந்து குறைந்தபட்ச நிதியை ஆண்டுத் தோறும் பங்களிக்கும் போது, அந்த மொத்தப்பணத்தைக் கொண்டு, இழப்பு ஏற்படும் சிலருக்கு இழப்பீடாக அளிக்க முடியும். இந்தக் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அடிப்படைத் தத்துவத்தில் தான் மொத்தக் காப்பீட்டு திட்டங்களும் இயங்குகின்றன. இழப்பு நடக்கும் விகிதம், அதனால் ஏற்படும் நிதிச் செலவு, இழப்புக்கான காரணங்கள் போன்றவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் சந்தாத் தொகையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அது எப்படி?