பேராசிரியர் பெ. விஜயகுமார்
எழுத்தாளர் சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "சல்மா" என்னும் ஆவணப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அவர் எழுதிய "அடைக்கும் தாழ்" என்னும் நாவல் சாதி, மத வேறுபாடுகளை மீறிய, காதல் திருமணங்களுக்கு எதிரான வன்முறையான சூழலைச் சித்தரிக்கும் நாவல். இயல்பானதும், இயற்கையானதுமான காதல் அவ்வளவு எளிதில் வெற்றி அடைய முடியாத அளவிற்கு இந்தியச் சமூகம் இறுக்கமாக இருப்பதை ’அடைக்கும் தாழ்’ நாவலில் சித்தரிக்கிறார். அதிலும் மதங்கள் கடந்த காதல் உறவு விளைவிக்கும் பிரச்சனைகள் சொல்லித் தீராதது. அப்படி அந்த நாவல் என்ன தான் சொல்கிறது..?