ந. பாலமுருகன், எழுத்தாளர்
குழந்தையின் கைகளில் இருந்த தட்டைப் பார்த்தான் சில சில்லரை நாணயங்கள் மட்டுமே இருந்தது. மொத்தமாகப் பார்த்தால் இருபது ரூபாய்கூடச் சேராது போலிருந்தது. குழந்தை அங்கிருந்தவர்களைப் பார்த்து "இரண்டு நாளா மழை, சாப்பிடல்ல.. பசிக்குது" என்பதைச் சைகையில் செய்து காட்டியபிறகும் கூடப் பெரிதாக யாரும் இரக்கப்படவில்லை. கூட்டம் முழுவதுமாக மறைந்துவிடக் குழந்தை இப்போது ஜன்னல் ஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஏக்கத்துடன் காசு கேட்க ஆரம்பித்தாள். சண்முகம் தனது சட்டையின் பாக்கெட்டைத் துழாவினான். பலசரக்கு வாங்கியது போக மிச்சம் முழுதாய் ஒரு இருபது ரூபாய் தாள் மட்டுமே இருந்தது. சில்லரை நாணயங்கள் எதுவும் இல்லை. அருகிலிருந்தவர்களிடம் சில்லரை கேட்டுப் பார்த்தான். அவர்களும் இல்லையெனத் தலையசைத்துவிட்டனர். என்ன செய்திருப்பான்?