ஆடிட்டர் கலாவதி ஜெய்
கேட்டரிங் உணவகத்தை முதலில் தொடங்கிப் பின்னர் பெரிய அளவில் ரெஸ்டாரண்ட்டாக மாற்றினார். "எனக்கு ஒரு உண்மையான சோதனை அது. எனக்குக் கழுத்துக்குக் கீழே எந்த உறுப்பும் வேலை செய்யாது. என்னுடைய தோள்கள் சமமாக இல்லை, முறையான உணர்வுகள் இல்லை, நுரையீரல் சரிவரச் செயல்படாது, என்னுடைய நரம்புகள் அங்கங்கே துண்டிக்கப்பட்டு இருக்கிறது. என்னால் தாடையை மூடி எச்சிலைக் கூடக் கட்டுப்படுத்த முடியாது. நான் உணவகத்தை நடத்துவதே ஒரு அதிசயம் தான்" என்கிறார் ஒரு பேட்டியில். உடல் சிதைந்திருந்தாலும் சிதையாத நம்பிக்கை கொண்டிருந்தார் தீபா.
வாழ்வை இழந்து சக்கர நாற்காலியில் சோர்ந்து கிடக்கும் பெண்ணல்ல என்பதை நிரூபித்துத் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்பெண் என்ற பெருமையைப் பெற்றார். எப்படி இவரால் சாத்தியமாயிற்று?