எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன்
ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை இயற்கையாகவே அறியலாம். அந்தக் காலங்களில் நாடியைப் பிடித்துப் பார்த்தே அறிவார்கள் வைத்தியர்கள். மாத இறுதியில் மாதவிடாய் வெளிப்படாமை, குமட்டல், வாந்தி, அசதி, களைப்பு போன்றவை ஏற்படுவது உடல்சார்ந்த அறிகுறிகள். மசக்கை ஏற்படுவதால் ஊறுகாய், சாம்பல் போன்றவற்றை உண்பார்கள். மசக்கையை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்கிறார்கள். உடலும் மார்பகங்களும் மென்மையாகும். கருப்பைவாய், யோனி போன்றவை கருநிறமாகும். ஐந்து மாதத்தில் சில பெண்களுக்கு வயிற்றில் லீனியா நிக்ரா எனப்படும் கருமையான கோடுகள் காணப்படும். கர்ப்பம் தரித்தபின்னும் மாதாமாதம் மாதவிடாய் ஏற்படுமா?