வஎஸ். இளமுகில் ,
அணித்தலைவர் ,
தானம் அறக்கட்டளை ,
என் பெயர் சுரபி சுக்லா. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் வாழ்கிறேன். நான் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்தே, ஒரு தோளில் துணிமூட்டையுடனும் மறுதோளில் பாத்திரமூட்டையுடனும் மாதாமாதம் எங்கள் வீட்டுக்கு 'குஜராத்தன்' வந்துகொண்டுதான் இருக்கிறாள். அவள் நிஜப்பெயர்கூட எங்களுக்குத் தெரியாது. அம்மா 'குஜராத்தன்' என்று அழைப்பதால் நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன். எங்கள் வீட்டில் உள்ள பழைய உடைகளை அம்மா தேடித்தேடிச் சேகரிக்கத் தொடங்கினாலே நாளை 'குஜராத்தன்' வரப்போகிறாள் என்பதற்கு அறிகுறி. யார் அந்த குஜராத்தன்? எதற்கு வருகிறாள்?