தமிழில் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களை எழுத்தாளர் சல்மாவுக்கு இணையாக வேறுயாரும் பதிவு செய்திடவில்லை. ’இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’ என இரு நாவல்கள், ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு, ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’ கவிதைத் தொகுப்புகள், ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயண நூல் ஆகியன இவரின் படைப்புகளாகும். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சல்மா’ என்கிற ஆவணப்படம் பிரிட்டிஷ் இயக்குநர் கிம் லாங்கினாட்டோ என்பவரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.