மதுரை மாவட்டத்திலுள்ள தொன்மையான ஊர்களில் ஒன்று பேரையூர். சங்க கால வரலாற்றை கொண்ட இந்த ஊரின் தொன்மையை உறுதிப்படுத்தும் சான்றாக இவ்வூரைச் சுற்றியுள்ள மலையடிவாரங்களிலும் இவ்வூரையொட்டியோடும் காட்டார் ஓடை கரைகளிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. இவற்றில் சங்க காலத்தினைச் சார்ந்த கருப்பு சிவப்பு வண்ண மட்கலயங்களும் இருந்தன.