“போர் என்பது மனித மனங்களில் தோன்றுவதால் அமைதியின் விதைகளை அம்மனித மனங்களிலேயே விதைத்து அமைதிக்கான பாதுகாப்பு அரண்களைக் கட்டமைக்க வேண்டும்.”
யுனெஸ்கோவின் முகப்புரை
போர் என்பது இரண்டு சமூகங்கள் அல்லது நாடுகளுக்கிடையில் நடைபெறும் ஓரு ஆயுதப் போராட்ட நிலையாகும். ஒரு போரானது அதீத வன்முறை, பேரழிவு, உயிரிழப்பு மற்றும் ஓழுங்கான அல்லது ஒழுங்கற்ற இராணுவ பலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மானுட வரலாற்றில் ஏறத்தாழ 14,000 ஆண்டுகளாக போர்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதற்கு ‘இடைக்கற்கால’ கல்லறைகளைத் தோண்டிய போது கிடைத்த 117 மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளுமே சாட்சி. அதில் 55 சதவிகித எலும்புக்கூடுகளின் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டிருந்தது ஆராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே போர் என்பது நீண்ட வரலாறுடைய, வன்முறை கலந்த ஆயுதப் போட்டி என்பது உறுதியாகிறது.
ஆயுதங்களின் வளர்ச்சி
கற்கால மனிதன் நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். பின்னர் கூரிய கற்கள் ஆயுதமாயின. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டபின் இரும்பாலான ஆயுதங்களையும் பயன்படுத்தத் .....