அரை நூற்றாண்டுக்கு மேலாக சண்டையிட்டுக் கொண்டிருந்த கொரிய நாடுகள் கைகுலுக்கியிருக்கின்றன. "1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிற்குப் பின்னர், கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதித்திருக்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்." என ஊடகங்கள் பரவசப்படுகின்றன. அண்மைக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
1910லிருந்து இரண்டாம் உலகப்போர் முடியும் வரை பிரிவுபடாத கொரியா ஜப்பானின் வசமிருந்தது. இரண்டாவது போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததையடுத்து .....