நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம்? விலங்குகளை விட ஒப்பீட்டளவில் நாம் எவ்வளவு திறன் படைத்தவர்கள்? நமது மூளைக்கு மட்டும் எப்படி அவ்வளவு சிறப்பு? உண்மையில் நாம் விலங்குகளை விட மேலானவர்கள் தானா? இப்படி நமக்குள் கேள்விகள் ஏராளம் உண்டு!
கற்றல் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே. பிறக்கும் போதே இருக்கும் திறமைகள் கற்றலில் சேர்த்தி இல்லை. பிறந்த பின் பெறப்படுபவையே கற்றலில் சேர்த்தி. மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? அவையெல்லாம் உயிர் வாழ ஆதாரத் தேவைகள். அப்படியான குணங்கள் எல்லாம் பெற்றோரிடமிருந்து பெறப்படும் ஆதார குணங்கள். இவை தவிர்த்து பின்னால் பெறப்படும் குணங்கள் யாவும் பெரும்பாலும் கற்றுக்கொள்ளப்பட்டவையே. பறவைகள் தங்கள் இயல்பான குரலை பிறப்பிற்குப் பிறகே கற்றுக்கொள்வதாய் கூறுகிறார்கள். குயிலின் இனிமையான குரல் அதன் குஞ்சுகளுக்கு இருப்பதில்லை. போகப்போக தங்கள் சகாக்களிடமிருந்தே போலச்செய்தல் மூலம் கற்றுக்கொள்கின்றன. கோழி .....