மழைத் தூரல் விழுந்தவுடனேயே சட்டென மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக்கொள்ளும். பெய்யும் மழையில் நனைந்து அதை அனுபவித்தல் என்பது பேரானந்தம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகள் மழையில் குதூகலித்து ஆடுவதை பெற்றோர், மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆண்டுகள் செல்ல செல்ல "மழையில் நனையாதே காய்ச்சல் வந்திடும்.." என பெற்றோர்களின் வார்த்தைகளால் குழந்தைகளுக்கு மழையில் நனையும் பாக்யம் கிட்டாமல் போய்விட்டது. அதற்கும் மேலே இப்போதெல்லாம் மழையை பார்க்கக் கூட தவமிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பருவமழை கூட பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைகாலம் எட்டிப் பார்த்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்கிறோமே அது குறித்து அறிந்திருப்பது அவசியம். தென் மேற்கு பருவ மழை, ஜூன் மாத முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாத கடைசி வரை பெய்யும். ஆப்ரிக்க தீவு நாடான மடகாஸ்கரில் துவங்கும் தென்மேற்குப் பருவக் காற்று, அங்கிருந்து .....