கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் இணைவு தான் ஹைட்ரோகார்பன்! ஹைட்ரோகார்பன் என்பது பொதுப்பெயர். பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், மீத்தேன், LPG, CNG உரம், ஷேல் காஸ் என்று எல்லாமே இதனுள்ளே அடக்கம். மீத்தேனின் வேதி இணைவு கார்பனும் ஹைட்ரஜனும். அதாவது CH4. ஒரு கார்பனும் நான்கு ஹைட்ரஜன்களும் சேர்ந்தது மீத்தேன். கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையே இன்னொரு CH2 வைச்சேர்த்தால் அதன் பெயர் ஈத்தேன் CH3CH3! மூன்று கார்பன் எனில் புரோபேன் நான்கு கார்பன் எனில் பியூட்டேன் ஐந்து எனில் பென்டேன் ஆறுக்கு ஹெக்சேன், ஏழுக்கு ஹெப்டேன் எட்டுக்கு ஆக்டேன் ஒன்பதுக்கு நேநேன் பத்துக்கு டெக்கேன்!
ஒரு கார்பனிலிருந்து நான்கு அல்லது ஐந்து கார்பன் வரை வாயு வடிவத்திலும், ஆறிலிருந்து எட்டு வரை திரவ வடிவத்திலும் எட்டு கார்பனுக்கு மேல் மெழுகுவடிவிலோ அல்லது திட வடிவிலோ இருக்கும். இவையெல்லாமே .....