2016 ஆம் ஆண்டு வெளிவந்த வால்ட் டிஸ்னியின் ஜங்கிள் புக் படத்தில் மறக்கமுடியாத ஒரு காட்சி. கிங் லூயி என்ற ஜைஜாண்டோபிதிகஸ் (ராட்சஸ மனிதக் குரங்கு) மோக்லி என்ற குழந்தை கதாபாத்திரத்தைப் பிடிக்க கையை நீட்டும். ஆனால் மோக்லி அதனிடம் பிடிபடாமல் தப்பித்து ஓடிவிடுவான். ஆனால் மொத்தக் கட்டடமும் மனிதக் குரங்கின் மீது விழும். ஜைஜாண்டோபிதிகஸ் ஒருகாலத்தில் இந்தியா உட்பட உள்ள ஆசிய நிலப்பரப்பில் சுற்றித் திரிந்த ஒரு இனம். அதனுடைய மிகப் பெரிய உருவத்திற்குப் போதுமான உணவு கிடைக்காததால் ஒரு கட்டத்தில் அழிந்தே போனது. அதனுடன் நெருக்கமான மற்றொரு இனம் இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் ஒராங் ஊத்தன் என்ற மனிதக் குரங்கு (நாம் ஒராங் உட்டான் என்று தவறாக உச்சரிக்கிறோமாம்) என்பதைத் தவிர அதைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை.