2017ஆம் ஆண்டில் தமிழகக் கடைகளிலிருந்து காணாமல் போயிருந்த கோக், பெப்சி குளிர்பானங்கள் அடுத்த ஆண்டிலேயே மீண்டும் வந்துவிட்டன. அந்த வரலாறு இதுதான்:
இந்தியாவின் குளிர்பானத் தொழில் 14,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறது. அதில் தென்னிந்தியாவின் குளிர்பானச் சந்தை 5000 கோடி ரூபாய் பெறுமானது. உலகமயப் பொருளாதாரம் கோலோச்சத் தொடங்கிய பிறகு, உள்ளூர் தயாரிப்புகளை ஓரம் கட்டிவிட்டு கோக், பெப்சி பானங்கள் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குளிர்பானச் சந்தையில் 80 சதவிகிதத்தை இவ்விரு நிறுவனங்களே வைத்துள்ளன.