பார்வையற்ற நிலையினை எண்ணிப் பார்க்கவே நமக்கு பகீர் என்கிறது. எனவே, மூளை, இதயம், சிறுநீரகம். கல்லீரல், கணையம் போன்ற முக்கிய உறுப்புகட்குத் தரும் முக்கியத்துவத்தினை கண்களைப் பேணிக்காப்பதற்கும் தரவேண்டும் என்கிறார் புதுக்கோட்டை ஸ்ரீசாரதா கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் டாக்டர் ஐஸ்வர்யா ஜனனி. கண்தொடர்பான பல நோய்கள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.
க்ளக்கோமா எனப்படும் கண் நீர் ஆழுத்த நோய் என்றால் என்ன?
தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப்பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் க்ளக்கோமாவுக்கான அறிகுறிகள்.