டாக்டர் பி.எம்.ஹெக்டே மருத்துவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அலோபதி மருத்துவர் ஆனாலும் மருந்துக் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளைக்கும் தேவையான அளவுக்கு மேல் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கும் எதிராக கட்டுரைகள் எழுதி சகமருத்துவர்களின் கடுப்பைச் சம்பாதித்து வருபவர். தன்னுடைய மாணவர் ஒருவரைப் பற்றி 2017 டிசம்பர் 24 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில் ஆராய்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்தார்.
“ஏற்கனவே தெரிந்த விஷயங்களை மீண்டும் திருப்பிச் சொல்வதால் அறிவு முன்னேறுவதில்லை.. மாறாக, மாற்றவே முடியாது என நிலைபெற்றுவிட்ட சில தவறான கோட்பாடுகளை உடைத்தெறிவதன் மூலமே முன்னேறுகிறது என மாணவர்களிடம் நான் கூறுவதுண்டு. எனது ஆயிரக்கணக்கான மாணவர்களில் அருணாச்சலம் குமார் அந்த போதனையை சரியாகக் கடைப்பிடிப்பவர். மணிபால் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறையில் அவர் ஓர் இளம்