இந்தாங்க நைநா.. என பால்கோவா பொட்டலத்தை நீட்டினார் மைனா..
என்ன.. ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததைக் கொண்டாடுகிறாயா..
அது இல்லை நைநா. இன்று என் பிறந்தநாள். கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக வித்தியாசமாக எப்படி கொண்டாடலாம்னு யோசித்தேன் அதுதான் பால்கோவா..
குஜராத் மாநிலத்தில் கெவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் ஒரு பையில் இருந்த பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்தநாளை பிரதமர் மோடி கொண்டாடியிருக்கிறார். அதுபோல நீ வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சித்திருக்கலாமே
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தார். அதையொட்டி பேனர் வைக்க கெடுபிடிகள் அதிகமாகின. என்றாலும் பேனர் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லையே..