என்ன நைநா டீ குடித்துவிட்டீர்களா கேட்டவாறு வந்தார் மைனா..
இன்றைக்கு டீக்கு குட்பை சொல்லிவிட்டு இளநீர் குடித்தேன். காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது பல வழிகளில் நன்மைதரும் என்கிறார்கள். இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. என்பதோடு இளநீர், சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.
காஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை என கார்த்தி சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே..
அந்த அரசியலை விடு. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகள், நம் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'இது, இரு தரப்பு பிரச்னை; மத்திய அரசு சமீபத்தில் எடுத்துள்ள முடிவு உள்நாட்டு விவகாரம்' என,