கனவில் தோன்றிய கடவுள், அவரது வீட்டிலிருந்து நிரந்தரமாக புறப்பட இருப்பதாகவும், அதற்குள் என்ன வேண்டுமோ கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதும் புகழேந்திப் புலவர் வெலவெலத்துப் போனார். குழப்பத்துடனும் படபடப்புடன் தன் குடும்பத்தினரிடம் இதனைத் தெரிவித்தார் புலவர். `நகைகள் நிறைய கேளுங்கள்' என்றாள் மனைவி சாரதா. `மாட மாளிகைகள் கேளுங்கள்' என்றாள் மகள் லட்சுமி. `அரசவைப் புலவராக உயர வேண்டும்" என்பது புலவரின் விருப்பமாகவும் கேட்கவேண்டிய பொருளாகவும் இருந்தது. ஆளுக்குஆள் தன் கோரிக்கையை வலுப்படுத்த குடும்பத்தில் சண்டை.