தேசிய கீதம் என்பது ஆழமாக முறையாக இயற்றப்பட்ட தேச எழுச்சிப்பாடல் ஆகும். இப்பாடலானது ஒரு நாட்டில் அரசுமுறையாக அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு தேசிய அடையாளம். ஒரு தேசிய கீதமானது அந்நாட்டின் பெருமைமிக்க வரலாற்றையும், கலாச்சாரத் தொன்மை¬யும் மற்றும் பல பெருமைகளையும் அழகான இசையுடன் வடிவமைத்துப் பாடுவது உலக முழுவதும் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என ஜோக்கியம் ரபாசேடா என்ற அறிஞர் "உலக தேசிய கீதங்கள்" எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
தேசிய கீதங்களின் வரலாறு
உலகின் பழமையான தேசிய கீதமாக நெதர்லாந்து நாட்டின் "ஹெட் வில்ஹமுல்" போற்றப்படுகிறது. இது 1568 - 1572க்குள் இயற்றப்பட்டாலும் அரசு ரீதியாக 1932ம் ஆண்டுதான் அங்கீகரிக்கப்பட்டு .....