இன்றைக்கு அச்சம் கலந்த சூழல் நிலவுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே போர் ஏற்பட்டுவிடுமா? பாகிஸ்தான் நம்முடன் போர் தொடுப்பார்களா? என்ற கேள்வியெல்லாம் மக்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது. போர்.. மக்கள் விரும்பாத ஒன்று. "புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்", என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இந்தப் பாடல் வரிகளின் உட்பொருளை எத்தனைபேர் உணர்ந்திருப்பார்கள் என்று கூறமுடியாது. இன்றைய தலைமுறையினர் போர்கள் மற்றும் அதனால் நிகழ்ந்த விளைவுகள் தேர்வுக்காக வரலாற்றுப் பாடத்தில் படிக்கலாம். ஆனால், அவற்றின் கொடுமைகளை உணர்ந்திருக்க முடியாது.
சுமார் எண்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களைக் கேட்டால், "அந்தக் கொடுமையை எப்படி மறக்க முடியும்? இரண்டாம் உலகப் போர் நடந்தபொழுது பள்ளியில் படித்துக் .....