கல்வியைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசிய மரபினர் நாம். ‘‘கேடில் விழுச்செல்வம்” என்று வள்ளுவம் கூறுகிறது. கல்வியே அழிவில்லாத சிறந்த செல்வமாகும். ஒருவருக்கு பொன், பொருள் போன்ற மற்றவை எல்லாம் சிறந்த செல்வம் ஆகாது. கல்விச் செல்வம் பிறரால் கொள்ளை கொள்ள முடியாதது. கொடுத்தால் குறையாதது. மேலும் உயிரோடும் உடலோடும் ஒட்டியது. இப்படி கல்வியைப் பற்றி நாம் பெருமை பேசியதால்தான் மக்களாட்சி முறை அரசாங்கம் உருவாகிய பின்னர் கல்வி கொடுப்பது அரசின் கடமை என்றானது. இன்றைக்கும் உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட தரமான, சமவாய்ப்புள்ள பள்ளிக் கல்வியை கட்டணமில்லாமல் வழங்குவது அரசின் கடமையாகத்தான் உள்ளது.
2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி குறித்த ஆய்வறிக்கையானது, புரூண்டி, எத்தியோப்பியா, கானா, கென்யா, தான்சானியா போன்ற .....