பள்ளிப்படிப்பை முடித்தாகிவிட்டது. இனி கல்லூரி தான்? என்ன படிக்கலாம்? பொதுவாக நாம் எடுத்த மதிப்பெண்கள் தான் நாம் என்ன படிப்பை மேற்கொள்வது என்பதை தீர்மானிக்கிறது. கூடவே பணமும்! கல்லூரிப்படிப்பை எடுத்தேயாக வேண்டுமா என்ன? நிறுத்திவிட்டு வேலைக்குப்போகலாம் தானே! +2 மட்டுமே படித்தவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும்? கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் +2 படித்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவு தானே? அப்படியானால் கல்லூரி படிப்பு வேலைக்கானதா? கலைக்கல்லூரிகளில் படிக்கும் படிப்பு வேலைக்கான அல்லது வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தைக் கொடுக்க முடியுமா?
ஒரு வேளை கல்லூரிப்படிப்பை விட பொறியியல் கல்லூரிகளில் படித்தால் இன்னும் கொஞ்சம் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதல்லவா? அதனால் தான் இத்தனை பொறியியல் கல்லூரிகளா? தமிழகத்திலிருந்து .....