"கல்வி ஒரு அரசியல் செயல்பாடு. கற்பிப்பவரும் கற்றுக் கொள்பவரும் 50% ஆசிரியராகவும் 50% மாணவராகவும் தங்களை உணர வேண்டும்" என்கிறார் ஃபாவ்லோ ஃபிரேயர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குபவை கல்வி, பொருளாதாரம், சுகாதாரம். பின்னிரண்டின் வளர்ச்சிக்கும் மிக அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. அத்தகைய கல்வியை வழங்கும் பள்ளிக்கூடங்கள் முதல் கல்லூரிகள் வரை கணக்கில் கொண்டால் , அவற்றின் ஆதாரமாக இருப்பவர்கள் ஆசிரியரும் மாணவர்களும் தான். கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் சம பங்கு வகிப்பது ஆசிரியரும் மாணவரும் என்றால் அதுவும் மிகையாகாது.