நமது நாட்டின் கல்வித்திட்டங்களை மாற்றி அமைக்கும் எண்ணத்துடன் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் என்பவர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அக்குழுவும் சென்ற ஆண்டு 484 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் மீது கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் எழுந்தன. தற்போது அந்த அறிக்கையின் சாரத்தைக் கொண்டு மத்திய அரசின் அமைச்சரவை 60 பக்கத்திற்கு ஒரு கல்விக் கொள்கையை நிறைவேற்றியுள்ளது.