அந்தக் காலங்களில், அதாவது, தொலைகாட்சிப் பெட்டிகளும் அதிரடி தனியார் வானொலிகளும் வராதபோது, கிராமத்தில் ஒரே பொழுதுபோக்கு நூலகங்கள்தான். அங்கே தவறாமல் படையெடுப்பவர்கள் கண்ணாடி போட்டு பேப்பர் படிக்கும் பெரியவர்கள், குடும்பக் கதைகள் படிக்கும் பெண்கள், அம்புலிமாமா போன்ற கதைகளுக்காக வரிசைகட்டி நிற்கும் சிறுவர்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஊருக்கு வெளியே ஆற்றங்கரையை ஒட்டி அமைந்திருந்த நூலகக் கட்டிடத்தின் அருகில் பெரிய அரசமரமும் பிள்ளையாரும் உண்டு. நூலகத்தில் படித்துமுடித்த களைப்புத் தீர, அந்த அரசமரம் பிள்ளையார்கோவில் சிமெண்ட் தரையில் சந்தோஷமாகப்படுத்தபடி ஊர்வம்புகள், உலகச் செய்திகள் என்று பேச்சுத் தொடங்கும். அதில் ஒரு பெரியவர் எல்லோரிடமும் .......