மிகச்சரியாக 87 ஆண்டுகளுக்கு முன் 1930 ஏப்ரல் 6ஆம் தேதியன்று குஜராத்தின் தண்டி கடற்கரையில் காலை 8.30 மணிக்கு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் உப்புச் சட்டத்தை எதிர்த்து ஒருபிடி உப்பினைக் கையில் அள்ளி தன்னுடைய 25 நாட்கள் 241 மைல்களைக் கடந்த யாத்திரையை காந்தியடிகள் நிறைவு செய்தார். வெறும் 78 சத்யாகிரதிகளுடன் 1930 மார்ச்சு 12ம் தேதி காந்திஜி ஆரம்பித்த நடைப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தை ஆங்கிலய அரசால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இன்றளவும் உலக வரலாற்றில் “சட்டமறுப்பு இயக்கம்” என்ற உப்புச் சத்தியாகிரப் போராட்டத்திற்கு “ஈடான ஒரு அகிம்சைப் போராட்டம் நடைபெற்றதில்லை என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
சத்யாகிரகத்தின் உதயம்
காந்திஜி தென்னாப்பரிக்காவில் இருந்தபோது இந்தியர்களுக்கெதிரான நிறவெறிக் கொடுமைகளை நேரில் கண்டார். 1893சூன் 7ம் தேதி பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட போதும் கோச் வண்டியில் தாக்கப்பட்டபோதும் அதற்கும் முன்பாக .....