"சார் எனக்கு ஒருவாரம் விடுப்பு வேண்டும்" சதீஷ் தனது அதிகாரியிடம் மொபைலில் லீவு கேட்டபோது அவருக்கு கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது.
எதுக்கு ஒரு வாரம் லீவ்.." அதிகாரியின் கேள்வி.
'சார், மூன்று நாட்களாக ஜுரம். மூச்சுவிட சிரமமாக இருக்குது. டாக்டர் பன்றிக்காய்ச்சலாகவும் இருக்கலாம் என்று சொல்கிறார். பயமாக இருக்கிறது
பன்றிக்காய்ச்சலா.. பாத்துக்கப்பா.. அதிகாரியின் குரலில் பரிவு எட்டிப்பார்த்தது.
காய்ச்சல் பலவகை நுண்ணுயிரிகளால் ஏற்படும். அவற்றில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் என பலவும் அடங்கும். புளூ காய்ச்சல் என்று நாம் வழக்கு மொழியில்