பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளரே என்பதற்கு சர் அலெக்சாண்டர் பிளெமிங் ஒரு சிறந்த முன் உதாரணம். அவருடைய அரிய கண்டுபிடிப்பு தான் பெனிசிலின். பெனிசிலின் என்பது பக்டீரியாத் தொற்றைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு நல்ல மருந்தாகும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சர் அலெக்சாண்டர் பிளெமிங் 1928இல் பென்சிலினைக் கண்டுபிடித்தார். எனினும், இதை முதன்முதலில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தியவர் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான ஹாவர்ட் வால்டர் புளோரே என்பவராவார்.