உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதைப் பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு கை, காலில் வலி ஏற்படுகிறது. ஆனால் மனம் சோர்ந்து போகிறது. மனதில் ஏற்படும் பிரச்சனைகள் உடலின் எல்லா பாகங்களையும் சென்றடைகிறது. மேலும் நமது செயல்திறன் (efficiency) நமது மனநலத்தை சார்ந்திருக்கிறது. நமது தினசரி வேலைகளை கவனமுடன் சிறப்பாக செய்ய நல்ல மனநலம் அவசியம். மனநலம் முக்கியமானது எனத் தெரிகிறது. ஆனால், கை,கால் வலி வந்தால் டாக்டரிடம் செல்லும் நாம், மனஉளைச்சலுக்கு மனநல ஆலோசகரை அணுகுவதில்லை.