இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்ல... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லனு" என்ற ஒரு சொல்லாடல் உண்டு. தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது இல்லை.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம். சுக்கு உடன் சேர்த்து மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் குடிக்கலாம். சளி, இருமல் போன்றவை குட்பை சொல்லிவிடும்.