இந்திய நாட்டில் 3.5 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான், இந்திய நாட்டை உலகின் சர்க்கரை நோயின் தலைநகரம் என உலக சுகாதார மையத்தால் (WHO) எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் இது 2, 3 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேண்டிங் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி உலகெங்கும் "உலக சர்க்கரை நோய்" தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்துவதே ஆகும்.