பல்வேறு மூளை நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களால் மக்கள் தம் உடல் இயக்கத்தை இழந்து நிற்கின்றனர். சிலர் தம் வாழ்க்கையையே ஒரு நொடியில் இழந்து விடுகிறார்கள். இதில் முக்கிய நோய் பக்கவாத நோய். மக்கள் பக்கவாத நோயைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். ஆனால், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், எவ்வாறு நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும், என்பதைத் தெரிந்து கொண்டால், பக்கவாத நோயின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்கிறார் மூளை நரம்பியல் மருத்துவர் அ.வேணி