ஹெல்த் என்ற ஆங்கிலச் சொல்லை எப்படி தமிழ்ப்படுத்துவது ஆரோக்கியம் என்றா? அல்லது சுகாதாரம் என்றா? அது அவ்வளவு பொருத்தமாகப்படவில்லை அப்படித்தானே! எனில் நலவாழ்வு ஓரளவிற்குச் சரியாயிருக்குமோ? உலக சுகாதார நிறுவனம் நோயில்லா நலவாழ்வு மட்டுமல்ல உடல், மனது, சமூக நலவாழ்வைத்தான் ஹெல்த் என வரையறுக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் 1948 இல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் இரண்டாண்டுகளிலேயே நலவாழ்விற்கென ஒரு நாளை ஒதுக்கி உலகெங்கிலும் ஆரோக்கியம் குறித்து எடுத்துச் செல்லலாமே என முடிவெடுத்து 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்து ..........