அயோடின் நம் அனைவரின் உடல் மற்றும் மன நலத்திற்கு மிக தேவையான ஒரு நுண்ணூட்ட சத்தாகும். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் சிசுவாக உருவானது முதல் வயதாகி முதுமைப் பருவம் அடைவது வரை மனிதர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் அயோடினின் பங்கு மிக முக்கியமானது. ஒருவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு ஸ்பூன் அளவே அயோடின் தேவை. இருந்தபோதிலும் ஒரு ஸ்பூன் அளவை ஒரே தடவையில் உட்கொண்டால் உடலுக்கு அன்றைய தேவைக்கு போக மீதமுள்ள அயோடின் உடலால், சிறுநீரில் வெளியேற்றப்பட்டு விடும்.
அயோடின் சத்து பற்றாக்குறை எல்லா வயதினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. குறைவான உடல் வளர்ச்சியினால் குள்ளமாக இருத்தல் (Cretinism), முன் கழுத்துக் கழலை (goitre),.....